பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூரில் இருந்து வதிஷ்டபுரம் செல்லும் வழியில் உள்ள ஒரு சந்து கடையில் காலை நேரங்களில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் உள்ளனர். எனவே சட்டவிரோதமாக இயங்கும் அந்த சந்து கடையை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.