தேனி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த வேண்டிய பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் நடந்து செல்வதற்கும், ஓய்வெடுப்பதற்கும் இடையூறு ஏற்படுகிறது. பஸ் நிலைய வளாகம் இருசக்கர வாகன நிறுத்தமாக மாறி வருவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.