உத்தமபாளையம் வாரச் சந்தையில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு முத்திரை பதிக்கப்படாத எடைக்கற்களை பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள் விற்கப்படுகிறது. வாரச்சந்தைக்கு செல்லும் பொதுமக்களுக்கு சரியான எடையளவில் காய்கறிகள், பழங்கள் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வாரச்சந்தையில் பயன்படுத்தப்படும் எடைக்கற்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.