சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் விலக்கு மெயின் ரோடு பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் இருந்தது. எனவே அதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. உடனே பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.