ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு 2023-24ம் நிதியாண்டில் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கி 8 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்தக்காரர் கட்டிடத்தை கட்டுவதற்காக பள்ளியின் சுற்றுச்சுவரை ஒரு பகுதியில் இடித்து கட்டுமானப் பொருட்கள் வந்து செல்வதற்காக பயன்படுத்தி உள்ளார். கட்டுமான பணி முடித்ததும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை கட்டாமல் அப்படியே திறந்து வெளியாக விட்டு சென்று விட்டார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுற்றுச்சுவரை அமைத்து தர வேண்டும்.
-ராமநாதன், விளாப்பாக்கம்.
Heading
Content Area