தேரூர் அருகே புதுகிராமம் மாணிக்க புத்தேரி பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு வேலைக்கு செல்லும் விவசாய தொழிலாளர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரிந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
-செல்லப்பன், புதுகிராமம்.