விருதுநகர் மாவட்டம் வலையபட்டி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் அனைத்தும் வெளிய நீட்டிக் கொண்டு இருக்கிறது. இதனால் ரேஷன் கடைக்கு வருபவர்கள் அச்சத்துடன் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் கடைக்கு உள்ளே கசிகிறது. எனவே பொதுமக்களின் நலன்கருதி கடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?