விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் கடந்த சில நாட்களாக கொசுக்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் வீட்டில் உள்ள சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். வேலைக்கு சென்று வருபவர்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலை தொடர்கிறது. மேலும் கொசுக்களால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கொசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.