விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஆபத்தை உணராமல் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்தவாறு அதிவேகத்தில் ஓட்டிச்செல்கின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் சாலையில் பயணிப்பதற்கே அச்சமடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாய நிலை நிலவுகிறது. எனவே அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?