விபத்துக்கு வித்திடும் மரம்

Update: 2026-11-22 09:16 GMT

உடுமலையை அடுத்த கொடுங்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கே.வல்லக்குண்டாபுரம் உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. அதில், ஒரு பெரிய புளியமரம் ஒன்று பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இதன் அருகிலேயே குடியிருப்பு உள்ளதால், காற்று அல்லது மழையின் போது எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து உள்ளனர். எனவே பட்டுப்போன புளியமரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுந்தரம், கொடுங்கியம்.

மேலும் செய்திகள்