கூடலூரில் இருந்து கோழிக்கோடு, வயநாடு செல்லும் மாநில நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. அத்துடன் தொடர் விபத்துகளும் நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.