சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2026-11-22 13:01 GMT

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பொன்விளையில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டள்ளது. இந்த மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. மேலும், மையத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தில் செடி-கொடிகள் வளர்த்து புதர்மண்டி காணப்படுவதுடன், விஷப்பூச்சிகள் நடமாட்டமும் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே,குழந்தைகள் நலன்கருதி அங்கன்வாடி மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, பத்தறை. 

மேலும் செய்திகள்