தஞ்சை மாவட்டத்தில் அதிகளவில் சாலையில் நாய்கள் சுற்றித்திரிகிறது. சாலையில் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர். நாய் குறுக்கிட்டு விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். பொதுமக்கள், தஞ்சாவூர்.