சாலையை ஆக்கிரமித்த முட்புதர்கள்

Update: 2026-11-22 14:01 GMT

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நல்லியாம்புதூர் பகுதியில் இருந்து ஆத்துமேடு செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் சாலையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் எதிரே கனரக வாகனங்கள் வரும்போது சாலை ஓரம் ஒதுங்க முடியாமல் அவதிக்குள்ளகின்றனர். சாலையோரம் உள்ள முட்புதர்கள், செடி கொடிகளை அகற்ற பனமரத்துப்பட்டி பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்