பர்கூர் ஜெகதேவி ரோட்டில் கொண்டப்ப நாயனப்பள்ளி மற்றும் அச்சமங்கலம் செல்லும் 4 சாலைகள் கூடும் அச்சமங்கலம் கூட்ரோடு பகுதியில் ஒரே இடத்தில் அருகருகே 2 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே காலதாமதம் இன்றி அந்த டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.