பாழடைந்த சுகாதார நிலையம்

Update: 2026-11-22 14:09 GMT

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த துணை சுகாதார நிலையம் சேதமாகி 10 ஆண்டுகளுக்கு மேலானதால் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த துணை சுகாதார நிலையத்தை பயன்படுத்த முடியாமல் உள்ளது.இங்கு பணிபுரியும் நர்சுகள் நாவக்குறிச்சி ஊராட்சி சேவை மையத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்