தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் மூக்கனூர்பட்டியில் இருந்து அப்பியம்பட்டிக்கு மண் சாலை செல்கிறது. இந்த வழியாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். மண் சாலையையொட்டி அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தில் எப்போதும் தண்ணீர் வற்றாமல் இருந்து வருகிறது. சாலையையொட்டி குளம் உள்ளதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் அதில் தடுமாறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள குளத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.