பர்கூர் ஒன்றியம் பாலினயனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கந்திகுப்பம் அருகே உள்ள வாத்தியார் கொட்டாய் என்ற இடத்திலிருந்து கோனேரி குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை சீரமைக்க செய்ய வேண்டும்.