சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்வதற்காக சீலநாயக்கன்பட்டி பைபாஸ் முதல் பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு வரை சாலையின் நடுவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மின் விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரிவதில்லை. பல இடங்களில் மின்கம்பங்களில் மின் விளக்குகள் இல்லாமல் காலியாக உள்ளன. எனவே அனைத்து கம்பங்களிலும் மின்விளக்குகளை அமைத்து இரவில் மின்விளக்குகளும் எரியும்படி செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.