பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் பெயர்ந்து கிடப்பதால் நோயாளிகள் மற்றும் சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவையும் விரைந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.