ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவில் அருகில் தாலுகா காவல் நிலையத்தில் திருட்டு மணல் வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஓரம் கட்டப்பட்டுள்ளன. அந்த இடத்தில் செடி, கொடிகள், புதர் வளர்ந்து காடுபோல் உள்ளது. அந்தப் பகுதியில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. நீதி விசாரணை முடிந்ததும், வாகனங்களை உரிய நேரத்தில் ஏலம் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தராஜன், ஆரணி.