ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம் புதூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, ஹான்ஸ் (கூலிப்) உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்ட விரோதமாக நடக்கும் போதைப் பொருள் விற்பனை இளைஞர்கள், பள்ளி மாணவர்களை குறிவைத்தே நடத்தப்படுவதால் அவர்கள் எளிதில் சிக்கி மீள முடியாமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே காவல் துறையும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களும் இளைஞர்கள், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.
-ராமன், மேலப்புலம்புதூர்.