ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகுதியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி நாட்களில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை சரி செய்யவும், மாணவிகளின் பாதுகாப்பு கருதியும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்த வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவிகளுக்கு இடையூறாக அப்பகுதிகளில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிகின்றனர். இதைப் போலீசார் கட்டுப்படுத்துவார்களா?
செல்வம் ஆற்காடு