கண்ணமங்கலம் புதிய சாலையில் வேலூர் மார்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிழற்குடை இருந்தது. சாலை விரிவாக்கப் பணிக்காகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் பழுதடைந்த நிலையில் இருந்த நிழற்குடையை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு இன்னும் அங்கு நிழற்குடை கட்டவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சத்தியசீலன், கண்ணமங்கலம்.