ஊராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படுமா?

Update: 2023-05-14 16:31 GMT

கண்ணமங்கலம் அருகில் உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் சித்ரசாவடி கேட் பகுதியில் ஊராட்சி மன்ற கட்டிடம், ஊர்ப்புற நூலகம், ரேஷன் கடை இயங்கி வருகிறது. பழைய ஊராட்சி கட்டிடம் பழுதடைந்து விட்டது. இதனால் தற்போது புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகம், ஊர்ப்புற நூலகக் கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால், நூலகம் இயங்கவில்லை. இதன் அருகிலேயே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. எனவே ஊர்ப்புற நூலகத்தில் செயல்படும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை உடனடியாக புதிய கட்டிடத்தில் இடமாற்றம் செய்து தரவேண்டும்.

-ஆதவன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்