வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள கட்டிடத்தில் வருவாய்த்துறையின் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலகம் மாடி பகுதியில் உள்ளதால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் அந்த அலுவலகத்துக்கு செல்ல படிக்கட்டுகளில் மிகவும் சிரமப்பட்டு ஏறி இறங்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக கீழ்பகுதியில் அந்தப் பிரிவை மாற்றிவிட்டு, மற்ற பிரிவில் ஒன்றை மேல் பகுதிக்கு மாற்ற வேண்டும் என முதியோர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சக்தி, வாணியம்பாடி.