அரக்கோணம் நகராட்சி சோளிங்கர் ரோட்டில் ஸ்டேட் பாங்க் அருகில் மற்றும் சுவால்பேட்டை திருத்தணி ரோடு ஆகிய பகுதிகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து புதிதாக கழிவறை கட்டினார்கள். அந்தக் கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமலேயே வைத்துள்ளனர். இதை, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிகாமணி, அரக்கோணம்.