புதிய பஸ் நிலைய கழிப்பறை பராமரிக்கப்படுமா?

Update: 2022-10-30 13:54 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை, பஸ் நிலையம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே சேதம் அடைந்து விட்டது. சென்னை பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே உள்ள கழிப்பறையில், கதவுகள் உடைந்து தண்ணீர் குழாயும் சேதம் அடைந்து விட்டது. சுகாதார வளாகங்களை தொடர்ந்து பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-கணபதி, முத்துமண்டபம், வேலூர்.

மேலும் செய்திகள்