திருப்பத்தூர் நகர எல்லைக்குள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வெளியூர் லாரிகள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாகம் சார்பில் வாணியம்பாடி மற்றும் கந்திலி, பனந்தோப்பு ஆகிய பகுதியில் விளம்பர பலகைகளை வேலூர் மாவட்டம் என்ற பெயரில் வைக்கப்பட்டு இருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் 2019-ம் ஆண்டு முதல் தனியாக செயல்பட்டு வருகிறது. இதுவரை அந்தப் பெயர் பலகையில் வேலூர் மாவட்டம் என்று தான் உள்ளது. இதை திருப்பத்தூர் மாவட்ட அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே வேலூர் மாவட்டம் என்று இருப்பதை திருப்பத்தூர் மாவட்டம் என திருத்தி எழுத வேண்டும்.
-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.