வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாக கட்டிடத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்படாததால் சமூக விரோதிகள் அங்கு மது குடித்துவிட்டு காலிப்பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் அந்த வணிக வளாகம் குப்பைகளாகக் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வணிக வளாகத்தை ஏலம் விட வேண்டும்.
-மாயவன், வேலூர்.