வேலூரை அடுத்த கீழ்மொணவூர் அருகே பெருமாள் நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடின்றி புதர் மண்டி சேதம் அடைந்துள்ளது. சுகாதார வளாகத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவிக்குமார், கீழ்மொணவூர்.