சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-08-28 10:24 GMT

ஆரணி பெரியார் நகர் மணியம்மை வீதியில் மக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பறை நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இயற்கை உபாதைைய கழிக்க கழிப்பிட வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

-விஜயராகவன், ஆரணி.

மேலும் செய்திகள்