வழிகாட்டி பெயர் பலகையை முறையாக வைப்பார்களா?

Update: 2023-10-22 18:03 GMT

வேலூர்-ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகே வேலூர் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட எல்.ஐ.சி. காலனி பகுதியின் பெயர் பலகை ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டு மேலும் உடைந்து சாக்கடையில் விழும் நிலையில் உள்ளது. இதில் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகிறது. எனவே இதை சீர் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உலகநாதன், வேலூர். 

மேலும் செய்திகள்