கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பார்களா?

Update: 2023-11-05 17:30 GMT

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகளை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தை தகடுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளால் ஆற்காடு பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்களுக்கு இடையூறாக உள்ளது. கஇதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பார்களா?

-ராஜகணபதி, ஆற்காடு.

மேலும் செய்திகள்

மயான வசதி