பாலம் அமைக்கும் பணி தொடங்குமா?

Update: 2023-03-29 17:13 GMT

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே சாலையில் சிறு பாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் அந்த வழியே வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு ஒரே வழியில் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. பள்ளம் தோண்டி 25 நாட்களை கடந்தும் இன்னும் பணிகள் தொடங்கவே இல்லை. இதனால் அந்த இடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பாலம் கட்டும் பணியை உடனே தொடங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-கவுதம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்