பேரணாம்பட்டை அடுத்த அரவட்லா ஊராட்சியைச் சேர்ந்த பாஸ்மார்பெண்டா கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 100 ஏக்கர் உள்ளது. அதில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச பட்டா வேண்டி முதல்-அமைச்சர் தனிப்பிரிலும், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திலும், ஜமாபந்தியிலும் கடந்த 5 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க முன் வர வேண்டும்.
-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.