ஆற்காடு நகராட்சி முஸ்லிம் பள்ளியில் இயங்கி வரும் பால்வாடி மையத்தின் நுழைவு வாயிலை பூட்டி வைத்துள்ளனர். இதனால் குழந்தைகள் பால்வாடி மைத்துக்கு வருவதற்காக தொலைதூர பாதை வழியாக சுற்றிக்கொண்டு வருகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படும் வழியாகத்தான் அவர்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி தெரு பக்கம் இருக்கும் நுழைவு வாயிலை திறந்து விட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அண்ணாசாமி, ஆற்காடு.