திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியிலும், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியிலும் உள்ள நிழற்குடைகளில் சிலர் தங்களின் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் வெயில் மற்றும் மழை நேரத்தில் நிழற்குடையின் அடியில் பயணிகள் நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ், திருவண்ணாமலை.