அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்களால் பஸ் நிலையத்தில் இருந்து அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள், பொதுமக்களும், ரெயில் நிலையத்துக்கு செல்பவர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அந்த இடத்தை கடந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.