திருப்பத்தூர் நகரம் முழுவதும் தனியார் நகைக்கடை சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் 36 வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.6 லட்சம் நிதி கொடுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை நகராட்சி நிர்வாகம் கண்காணிப்பு கேமராவை பொருத்தவில்லை. உடனடியாக அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
-டி.வி. பிரேம்குமார், நகராட்சி கவுன்சிலர், திருப்பத்தூர்.