திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண மற்றும் பொதுத தரிசன வரிசை உள்ளது. இக்கோவிலில் கட்டண தரிசன வழியில் பக்தர் ஒருவர் செல்வதற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக கட்டண தரிசன வழியில் ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டண தரிசன வழியில் பழைய முறைப்படி ரூ.20 மட்டும் வசூலிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருணாச்சலம், திருவண்ணாமலை.