வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தினமும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தற்போது தொடர் மழை பெய்து வருவதால் குப்பைகளை சேகரிக்க ஊழியர்கள் பாதுகாப்பு உடை இன்றி செல்வதால் சிரமப்படுகின்றனர். வேலூர் கஸ்பா பகுதியில் ஊழியர் ஒருவர் மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பு உடை இல்லாததால் அவர், பிளாஸ்டிக் கவர்களை தலையிலும், உடையாகவும் அணிந்து குப்பை சேகரித்தார். அவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குமா?
-மதிவாணன், வேலூர்.