கூடுதல் இடங்களில் பிரசாத மை வழங்கப்படுமா?

Update: 2025-01-26 19:19 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரசாத மை வாங்குவதற்காக பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருக்கின்றனர். காலையில் 2 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும் மட்டுமே பிரசாத மை வழங்குகிறார்கள். எனவே கோவில் நிர்வாகம் இன்னும் கூடுதல் இடங்களில் பகல் பொழுதில் பிரசாத மை வினியோகிக்க நடவடிக்கை எடுக்குமா?

-என்.சின்னத்துரை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்