ஆற்காடு பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது தண்ணீர் வசதி இல்லாமல் பராமரிப்பின்றி முட்செடிகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும் தண்ணீர் வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என அதே இடத்திலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் நபர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் அங்கு புழுக்கள் நெளிகின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த நம்ம டாய்லெட் திட்டத்தை மீண்டும் நகராட்சி நிர்வாகம் கையில் எடுத்து சிறந்த முறையில் பராமரிக்குமா?
-வெங்கட்ராமன், ஆற்காடு.