ஆற்காட்டில் காட்டன் சூதாட்டம், 3 சீட்டு ஆகியவை அப்பாவி மக்களை பாதிக்கும் வகையில் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தினசரி கூலி வேலைக்குச் சென்று திரும்பும் நபர்கள் இந்த சூதாட்டத்தில் அன்றைய தினம் வாங்கிய கூலியை கட்டி ஏமாறுகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் இல்லத்தரசிகள் வெளியில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் உருவாகிறது. அவ்வாறு பெற்று கடனை திருப்பி கட்ட முடியாமல் பல குடும்பங்கள் கடன் காரர்களுக்கு பயந்து ஊரை விட்டு ஓடக்கூடிய ஒரு சூழலும் உருவாகிறது. தற்கொலை சம்பவங்களும் நடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தனசேகர், ஆற்காடு.