ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

Update: 2024-09-22 20:34 GMT

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராஜகோபுரம் முன்பு பக்தர்கள் நடந்து செல்லும் பகுதியில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ராஜகோபுரம் முன்புள்ள தரைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

-ராஜன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்