வாலாஜா புதிய வட்டாட்சியர் அலுவலகம் பழைய அரசு மருத்துவமனை எதிரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து உள்ளே அடங்கி உள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவலகம் முன்பில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் வட்டாட்சியர் அலுவலகம் இருக்கும் இடமே பொதுமக்களுக்கு தெரியவில்லை. வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் பலகை உள்ளது. இதை இங்கிருந்து அகற்றி இப்போதுள்ள இடத்துக்கு முன்னால் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பொருத்த வேண்டும். இதனால் பொதுமக்கள் அலைகழிப்பு குறையும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கவுதம், வாலாஜா.