பயணிகள் நிழற்கூடம் கட்டுவார்களா?

Update: 2024-10-13 20:57 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் வாலாஜா-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நோயாளிகள் மரத்தடியின் நிழலிலும், கடையின் முன்பகுதியிலும் நிற்கின்றனர் . பூட்டுத்தாக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் எம்.பி. மற்றும் எல்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர வேண்டும்.

-ராம்குமார், ரத்தினகிரி.

மேலும் செய்திகள்