திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மனுக்கள் வாங்கப்படுகிறது. அதில் பெரும்பாலான மனுக்கள் பட்டா மாறுதல் மனுக்கள் ஆகும். அந்த மனுக்களை கலெக்டர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் நிலம் வேறொருவர் பெயரில் பதிவு செய்ததும் பதிவுத்துறை மூலமே தாசில்தாருக்கு அனுப்பி, தாசில்தார் தாமாகவே பட்டா மாற்றம் செய்தால் பெரும்பாலான விவசாயிகள், பொதுமக்களின் குறைகள் தீரும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-என்.சின்னத்துரை, திருவண்ணாமலை.