ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதானது. இதனால், புதிய கட்டிடம் கட்டுவதற்கு கான்கிரீட் சுவர் எழுப்ப இரும்புக்கம்பிகள் கட்டப்பட்டு பல மாதங்கள்ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. இரும்புக்கம்பிகள் துருப்பிடித்து வலுவிழக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மைய கட்டிட பணிகளை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்.
ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.